சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் என்றும், சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ எனும் திரைப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டும் வெளியாகும் என்றும், விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என்று தகவல் தெரியவந்துள்ளது.