இரு மோட்டார் சைக்கிள் நேர் எதிரே மோதிக்கொண்ட விபத்தில் பீடி கான்ட்ராக்டர் பலியாகி 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் பகுதியில் பக்கீர் மைதீன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பீடி கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பக்கீர் மைதீன் வேலை காரணமாக தென்காசிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து பக்கீர் மைதீன் தனது மோட்டார் சைக்கிளில் ஆசிர்வாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக 3 பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளனர். அப்போது பக்கீர் மைதீனின் மோட்டார் சைக்கிளும் எதிரே வந்தவர்களின் மோட்டார் சைக்கிளும் பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் பக்கீர் மைதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து 3 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் பக்கீர் மைதீனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.