Categories
கொரோனா தேசிய செய்திகள்

கொரோனா வார்டிற்குள்….. “பன்றிகள் கூட்டம்” சுகாதாரதுறை அமைச்சர் விளக்கம்….!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வார்டிற்குள் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு குறைந்தபாடில்லை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதைப் போலவே குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது. இது ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும் இந்தியாவின் பல பகுதிகளில் சில மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளப்படுவதில்லை எனவும், மருத்துவமனை நிர்வாகமும், அதிகாரிகளும் இதில் அலட்சியம் காட்டுகிறார்கள் எனவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

அந்த வகையில், கர்நாடக மாநிலம் கல்புர்க்கி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் கொரோனா வார்டில் பன்றிகள் தனது குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இப்படி பன்றிகள் வார்டிற்குள் சுற்றித் திரிவது கொரோனா நோயாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எதிர்காலத்தில் இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது எனவும் உறுதியளித்துள்ளார்.

Categories

Tech |