புறா முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவையினத்தை சேர்ந்த உயிரினமாகும். மன்னர்கள் காலத்தில் கடிதப்போக்குவரத்து மற்றும் தூது ஓலை அனுப்புவதற்கு நன்கு பயிற்சிகொடுத்துப் பழக்கப்பட்ட புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இதை விட சிறப்பான புண்ணிய காரியங்களுக்காகவும் புறாக்களை வளர்த்து வந்தனர்.
இந்தியாவில் பெரும்பாலான பழமைவாய்ந்த கோவில்கள் உள்ளன. இந்த கோயில்கள் அந்த காலத்தில் நம் முன்னோர்களால் கட்டப்பட்டு பிரம்மாண்டமா சிற்ப கலைக்கு சிறந்த முன் உதாரணமாக விளங்கி வருகிறது.
இவ்வாறு கம்பிரமாக நிமிர்ந்து நிற்கும் கோவில்களை பராமரிக்க சில வழி முறைகளை இயற்கையோடு இணைந்து நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தனர். அதில் ஒன்றுதான் புறாக்கள் வளர்ப்பது:-
- கோயில்களில் புறா இருந்தால் சிலந்தி வலை ஒட்டடை பிடிக்காது.
- துளையிடும் வண்டுகள் கரையான்கள் வந்தால் புறாக்களுக்கு இரையாகி விடும்.
- சிற்பங்களை சேதப்படுத்தும் சிற்றுண்ணிகளையும் இரையாக்கி கற்களைப் பாதுகாக்கும்.
- ஆந்தை, வெளவால் கோயிலுக்கு வந்தால் புறா ஓசை எழுப்பி விரட்டி விடும்.
- புறாக்கள் எழுப்பும் ஓசை நோயாளியின் நோய்களை குணப்படுத்தும் வல்லமை மிக்கது.
- புறாக்களின் எச்சம் வாசனைக்கு பாம்புகள் வராது.
- இது போன்ற பல காரணங்களுக்காக முன்னோர்கள் புறாக்களை கோயில்களில் வளர்த்து வந்தனர். இதனை உணர்ந்து நம் முன்னோர்கள் பாதுகாத்து வந்த பாரம்பரியத்தை காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.