Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் சீசன் 5″… தந்திரமாக விளையாடும் போட்டியாளர்கள்… ஜெயிக்கப் போவதும் இவர்கள் தானாம்…!!!

பிக் பாஸில் 3 போட்டியாளர்கள் தந்திரமாக விளையாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரம் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 இல் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் மூன்று பேர் தந்திரமாக விளையாடிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா, யாஷிகா ஆனந்தின் லிப் லாக் வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய நடிகர் நிரூப் மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் பிரபலம் ராஜு ஆகிய 3 பேரும் தற்போது ஸ்ட்ராங்கான கன்டஸ்டன்ட் ஆக வலம் வருகின்றனர் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் இவர்கள் 3 பேரும் சாட்டர்ஜி உடன் விளையாடுவதால் இவர்களில் ஒருவர்தான் கண்டிப்பாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |