மனநலம் பாதிக்கப்பட்ட பிளம்பர் உடலில் தீ வைத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சின்ன அருங்கால் கிராமத்தில் கன்னியம்மன் கோவில் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிளம்பராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் 2 வருடங்களாக சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட காரணத்தினால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அப்போது திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தாயார் மற்றும் மனைவி ஆகிய 2 பேரும் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.
இதனால் அவரின் தாய் மற்றும் மனைவி ஆகிய 2 பேரும் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரின் தாய் மற்றும் மனைவி ஆகிய 2 பேருக்கும் மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.