கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டில் தற்போது வரை 1,76,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதற்கு எதிரான சிகிச்சையாக, கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட ரத்த பிளாஸ்மா சிகிச்சைக்கு அவசர ஒப்புதல் அளிப்பதாக அமெரிக்காவின் அதிகாரிகள் நேற்று கூறியிருந்தனர். இந்த பிளாஸ்மாவில் அதிக சக்தி வாய்ந்த ஆன்டிபாடிகள் இருப்பதால், அவை நோயை எதிர்த்து போராடுவதற்கு உதவுகின்றன. அதுமட்டுமன்றி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
இந்த சிகிச்சையானது சில நாட்களாக அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இருந்தாலும் அதன் செயல்திறன் அளவு குறித்து நிபுணர்கள் சோதித்து வருகின்றன. அதுமட்டுமன்றி சில பக்க விளைவுகளை இந்த பிளாஸ்மா சிகிச்சை ஏற்படுத்தும் என சிலர் கூறிவருகின்றனர். மேலும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், கொரோனாவிற்கு சிகிச்சையளிப்பதில் பிளாஸ்மா மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என கூறியுள்ளனர். இதுகுறித்து நியூயார்க் நகரத்தில் இருக்கின்ற லெனாக்ஸ் ஹுல் மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் லென் ஹொரோவிட்ஸ் கூறும்போது, ” மருத்துவ பரிசோதனைகளில் பிளாஸ்மா சிகிச்சை நிரூபிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.
அது மட்டுமன்றி இது இன்னும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மீட்பு சிகிச்சையாக இல்லை. ஒரு நபர் வைரஸை வெளிப்படுத்திய பின்னர், உடல் தொற்றுநோயை நடுநிலையாக்க முயற்சி செய்யும்போது, பிளாஸ்மா மிக சிறப்பாகவே செயல்படும்” என்று அவர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவசரகால அங்கீகாரத்தை செய்தியாளர்கள் சந்திப்பின்போது ட்ரம்ப் அறிவிப்பார் என்ற செய்தி நேற்று வெளியானது. இருந்தாலும் ஜனாதிபதியின் திட்டங்கள் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு வெள்ளை மாளிகை மறுப்பு கூறிவிட்டது. மேலும் அமெரிக்க ஜனாதிபதி பிளாஸ்மா சிகிச்சைக்கு ஒப்புதல் அளித்து விட்டதாக கூறியிருந்த வாஷிங்டன் போஸ்ட், அமெரிக்காவில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியிருக்கிறது.