கோவையில் 13 வயது சிறுமியின் வயிற்றில் பிளாஸ்டிக் கவர்:
கோவையில் 13 வயது சிறுமி நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அந்த சிறுமி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்தபோது வயிற்றில் கட்டி போன்று இருப்பது கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வயிற்றில் இருப்பது கட்டி இல்லை என்பது தெரியவந்தது.
வயிற்றில் இருந்த அரை கிலோ எடையுள்ள தலைமுடி, ஷாம்பு மற்றும் சிறு பிளாஸ்டிக் பொருட்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டன. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் செய்வதறியாது பிளாஸ்டிக் கவர்களை சாப்பிட்டுள்ளார் என கூறியுள்ளனர்.