லாரியில் கடத்தி வரப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் விவேக் தலைமையிலான குழு சேலம் மெயின் ரோடு அருகில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சென்னையில் இருந்து வந்த லாரியை மடக்கி சோதனை செய்ததில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அதை பறிமுதல் செய்துள்ளனர். இது பற்றி துப்புரவு ஆய்வாளர் விவேக் கூறியதாவது, பிடிக்கப்பட்ட லாரியின் உரிமையாளருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து சோதனை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.