Categories
உலக செய்திகள்

துப்பாக்கி சூடு நடத்திய தேசிய பாதுகாப்பு படையினர்…. 16 தீவிரவாதிகள் பலி…. பிலிப்பைன்ஸில் பரபரப்பு….!!

தேசிய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 16 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 52 ஆண்டு காலமாக ‘நியூ பீபுள்ஸ் ஆர்மி’  என்ற தீவிரவாத அமைப்பு அந்நாட்டு அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றது. அந்த தீவிரவாத அமைப்பில் உள்ள 3000 தீவிரவாதிகள் அப்பகுதியில் உள்ள சில முக்கியமான கிராமங்களில் தாக்குதல் செய்வதையே நோக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் ‘நியூ பீபுள்ஸ் ஆர்மி’ தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சமர் பகுதியில் பதுங்கியிருப்பதை ராணுவ ரகசிய பிரிவினர் உறுதி செய்து அந்நாட்டு தேசிய பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த தகவலின் பேரில் தேசிய பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் தேசிய பாதுகாப்பு படையினரை நோக்கி தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். உடனடியாக தேசிய பாதுகாப்பு படையினர் பதிலுக்கு நடத்திய தாக்குதலில் 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 19 பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ராணுவத் தலைவர் ரமோன் சகலா தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |