கொரோனா பரவலின் காரணமாக பத்து நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயண தடையை பிலிப்பைன்ஸ் நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக பொதுமுடக்கம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தீவிரப்படுத்தி வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி வருகின்றது. இதனையடுத்து உலகம் முழுவதும் அதிக அளவில் கொரோனா தொற்று பரவியிருந்த நிலையில் இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகமாக தடை விதித்திருந்தது.
இது கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்திய பயணிகளுக்கு விமானத்தடை விதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து உலக நாடுகள் முழுவதும் தொடர்ந்து பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பத்து நாடுகளுக்கு பிலிப்பைன்ஸ் அரசு பயணத் தடை விதித்திருந்தது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் 10 நாடுகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது என பிலிப்பின்ஸ் அரசு அறிவித்துள்ளது.
மேலும் பயணத்தடை நீக்கப்பட்ட 10 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் வரும் 6 ஆம் தேதி முதல் பிலிப்பைன்சில் அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதாவது பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபர் பயணத்தடை நீக்கத்திற்கான ஒப்புதல் முடிவை வழங்கியுள்ளார். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் பிலிப்பின்ஸில் 20310 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யபட்டுள்ளது.