Categories
உலக செய்திகள்

இந்த மாத்திரையில் இவ்ளோ பிரச்சனையா..? பிரபல நாட்டில் அதிர்ச்சி… வெளியான பரபரப்பு தகவல்..!!

உலகின் பயங்கர வெடி மருந்துகள் பிரித்தானியாவில் பரிந்துரைக்கப்படும் உயர் இரத்த அழுத்த மருந்துகளில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் சுகாதாரத்துறையினர் உயர் ரத்த அழுத்தத்திற்காக பயன்படுத்தும் மாத்திரைகளில் பயங்கர வெடி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை திரும்ப பெற உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். அதே சமயம் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் அந்த மாத்திரைகளில் கலந்திருப்பதால் அவற்றின் விற்பனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியாவில் வாழும் பல மில்லியன் மக்கள் இந்த மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களாக சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த மாத்திரைகள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருந்தை உடனே நிறுத்தி விட முடியாத காரணத்தினால் அவர்கள் அருகில் உள்ள மருத்துவரை அணுகி அவர் கூறும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Categories

Tech |