அமெரிக்க நாட்டில் விமான விபத்தில் நூலிழையில் உயிர் பிழைத்து, பயணிகளை காப்பாற்றிய விமானி மற்றும் துணை விமானிக்கு திருமணம் நடந்திருக்கிறது.
வாஷிங்டனில் வசிக்கும் அலீன் கிங் மற்றும் ரோசினா ஆகிய இருவருக்கும் ஒரு வருடத்திற்கு முன் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. விமானிகளான இருவரும் கடந்த 20-ஆம் தேதி அன்று சிறிய வகை விமானத்தில் பயணித்தனர். அப்போது, நடு வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பழுது ஏற்பட்டது.
இதனால் பதறிப்போன இருவரும் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால், அந்த பகுதியில் குடியிருப்புகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது. எனவே எங்கு தரையிறக்குவது? என்று புரியாமல் குழம்பி போனார்கள். அதன் பின், ஒரு வழியாக விமானம் தரையிறக்கப்பட்டது.
எனினும் விபத்து ஏற்பட்டு இருவரும் சிறிய அளவில் காயமடைந்தனர். இந்நிலையில், விபத்து நடந்த 5 நாட்கள் கழித்து இருவரும் திருமணம் செய்திருக்கிறார்கள். இது குறித்து, அந்த விமானத்தின் துணை விமானியான ரோசினா தெரிவித்ததாவது, அந்த நேரத்தில் அனைத்து உயிர்களையும் பாதுகாத்த உண்மையான ஹீரோ அலீன் தான். விமானத்தில் அந்த சமயம் நான் மட்டும் இருந்திருந்தால், என்ன செய்திருப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.