Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“பருக்களால் ஏற்படும் சருமத்துளைகள்”… எப்படி போக்குவது… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

முகத்தில் துளைகள் திறந்து இருந்தாலே பிரச்சனை ஏற்படும். இதனை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

முகத்திற்கு மேக்கப் போடும் அழுக்கு, தூசி எல்லாம் சேர்ந்து முகத்தில் திறந்த துளைகளை உருவாக்குகிறது. இதனை பெரும்பாலானோர் எதிர்கொள்கின்றனர். இந்த துளைகள் மூக்கை சுற்றி, கன்னங்களை சுற்றி தான் காணப்படும். சருமத்துளைகள் திறந்திருக்கும் போது மேக்கப்பாள் இதனை மூடுவது என்பது சாத்தியமில்லை. அப்படியே விட்டுவிட்டாலும் சருமத்திற்கு நல்லது கிடையாது. இயற்கை வழிகளைப் பயன்படுத்தி துளைகளை எப்படி மூடுவது என்பதை பார்க்கலாம்.

நீராவி பிடியுங்கள்

சருமத்தில் இருக்கும் அழுக்கை அகற்ற உதவும் சிறந்த முறை நீராவிப் பிடிப்பது. பாத்திரத்தில் நீர் விட்டு கொதிக்க வைத்து தலைவரை ஒரு கனமான போர்வையை கொண்டு மூடி பாத்திரத்தில் வெளியாகும் ஆவியை முகத்தில் காட்ட வேண்டும். முகத்தில் அதிக நீர் வெளியேறும். இவை அனைத்தும் சருமத்திற்கு அழகு தரும். இந்த முறை செய்வதற்கு முன் முகத்தை லேசாக சுத்தப்படுத்திய பிறகு நீராவிப் பிடிப்பது சருமத்தில் திறந்திருக்கும் துளைகளை அழுக்குகளை முழுவதுமாக வெளியேற்றும். இதன் பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால் திறந்த துளைகள் மூடிவிடும்.

தக்காளி கூழ்

தக்காளியால் சருமத்திற்கு பல நன்மைகள் இருக்கின்றது. சருமத்துளைகளை மூடுவதற்கு தக்காளி மிகவும் பயனளிக்கிறது. ஒரு தக்காளியை எடுத்து அதனை நன்றாக மசித்து ஒருதுளி தேன் சேர்த்து அதனை சுகம் முழுக்க மசாஜ் செய்யவேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் சருமத்திற்கு இயற்கை அழகு கிடைக்கும். தக்காளியை இயற்கை டோனர் என்று கூறலாம்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் சிலிக்கா என்று சற்று உள்ளடங்கி இருக்கிறது. இது சருமத்தை அழகாக வைத்திருக்க உதவ கூடியது. விரிந்த சருமத்துளைகளில் மூடுவதற்கும் இது உதவுகிறது. வெள்ளரிக்காய் உடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து அதில் முகத்தை தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளபளவென்று இருக்கும்.

வாழைப்பழத் தோல்:

வாழைப்பழத் தோலை நாம் பயன்படுத்தி விட்டு அதனை கீழே தூக்கி எறிந்து விடுகிறோம். அதில் லூட்டின் என்ற சத்து உள்ளது. வாழைப்பழத் தோலை எடுத்து சருமத்தில் வட்ட இயக்கத்தில் தேய்க்கவேண்டும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் முகத்தில் திறந்த துளைகள் பெருமளவு சுருங்கிவிடும்.

முல்தானி முட்டி

முல்தானிமுட்டி பருக்களை குறைவதற்கு உதவுகிறது. சருமத்துளைகளில் இருந்து பாதுகாக்கிறது. அழுக்கை இந்த முல்தானிமட்டி பூசுவதால் உறிஞ்சி எடுக்கிறது. இரண்டு ஸ்பூன் அளவு முல்தானி மட்டி எடுத்து சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து அடர்த்தியான பேஸ்டாக தயாரித்து முகத்தில் தடவி, அது உலர்ந்தபின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமம் இறுகி துளைகள் மூடப்படும்.

முட்டையின் வெள்ளைக்கரு

விரிவடைந்த சருமத் மீண்டும் சுருங்க முட்டையின் வெள்ளை கரு பெரிதளவு பயன்படுகிறது. முகத்தில் இருக்கும் எண்ணையை வெளியேற்றுவதற்கு இது உதவுகிறது. முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஓட்ஸ் மற்றும் ஒரு சொட்டு எலுமிச்சை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவி அதனை எடுக்க வேண்டும்.

மஞ்சள்:

பேக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டது மஞ்சள். மஞ்சள் தோல் அழற்சியை குறைப்பதால் சருமத்துளைகளை மூடுவதற்கு பெரிய அளவில் பயன்படுகிறது. மேலும் சருமத் துளைகளை சுற்றியுள்ள வீக்கத்தையும் குறைக்கிறது. ஒரு டீஸ்பூன் மஞ்சள் எடுத்து தண்ணீரில் சேர்த்து அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

ஐஸ்கட்டி:

விரிவாக்கப்பட்ட சருமத்துளைகளை குறைக்க இது உதவுகிறது. ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்துகிறது. ஐஸ் கட்டியை எடுத்து சுத்தமான துணியில் சுற்றி முகத்தில் நன்றாக 15 முதல் 20 நிமிடம் வரை ஒத்தடம் கொடுக்கவும். தினமும் 2 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Categories

Tech |