தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். துணிவு திரைப்படம் அடுத்த பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதால் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் அஜித் சென்னையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.
அப்போது அஜித்தை காண பல ரசிகர்கள் சூட்டிங் நடக்கும் இடத்தில் கூடினர். மேலும் படப்பிடிப்பு நடக்கும் போது சுவரின் மீது ஏறி பல ரசிகர்கள் அஜித்தை பார்த்து ஆரவாரம் செய்தனர். அதன் பிறகு அஜித் வீட்டிற்கு செல்லும் போது பைக்கில் அவரை பின் தொடர்ந்தனர். இதை எல்லாம் பார்த்த அஜித் அந்த ரசிகர்களை அழைத்தார். அப்போது அவர்களிடம் சுவரின் மீது ஏறி, பைக்கில் பின் தொடர்ந்து என்னை பார்க்க வேண்டாம். ஏதாவது விபத்து ஏற்பட்டால், அது அனைவருக்கும் கஷ்டமாகிவிடும். எனவே பாதுகாப்பாக இருங்கள் என்று அவர்களின் தோல் மீது கைவைத்து அட்வைஸ் செய்துள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.