Categories
தேசிய செய்திகள்

சிஏஏ-க்கு போராட்டம்… ”வேடிக்கை பார்க்க முடியாது”…. விஜயன் எச்சரிக்கை ..!!

சிஏஏ-க்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்தின் மூலம் அமைதியின்மையை உருவாக்க நினைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் டெல்லியிலும் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு மாநில அரசு ஆதரவு தெரிவித்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

குறிப்பாக கேரள சட்டமன்றத்தில் முதல் முதலாக இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து பஞ்சாப் , மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலமும் தீர்மானம் ஏற்றினர். போராட்டம் நடைபெறும் பகுதிகளில் ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் 4 நாளில் 3 முறை துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது நாட்டையே உலுக்கியது.

இந்நிலையில் இன்று கேரள மாநில சட்டமன்ற கூட்டத்தொடரில் அம்மாநில முதல்வர்  பினராயி விஜயன் சிஏஏ-க்கு எதிர்ப்பு போராட்டம் குறித்து பேசினார். அப்போது எஸ்டிபிஐ போன்ற தீவிரவாதக் குழு சிஏஏ-க்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியின்மையை உருவாக்க முயற்சிக்கிறது. அதனை மாநில அரசு ஏற்காது. அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று விஜயன் தெரிவித்தார்.

Categories

Tech |