Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பிணத்தின் மீது அமர்ந்து அகோரிகள் நடத்திய பயங்கர பூஜை…. திருச்சியில் பெரும் பரபரப்பு….!!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள மணிகண்டம் பகுதியில் ஒருவர் விபத்தில் நேற்று முன்தினம் இறந்தார். திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சமுதாய நலக்கூடம் சுடுகாட்டிற்கு அவரின் உடல் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் திடீரென உடல் முழுவதும் திருநீர் பூசிக்கொண்டு பயங்கரமான அகோரி மணிகண்டன் மற்றும்  மற்ற அகோரிகளும்  கடும் பயங்கரத்தில் காட்சியளித்து வந்தனர். அதன்பிறகு அகோரி மணிகண்டன் இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைவதற்காக இறந்தவர் மீது அமர்ந்து சிறப்பு பூஜைகளை செய்தார்.

மேலும் மற்ற அகோரிகள் மேளதாளம் இசைத்தும் மற்றும் சங்கு ஊதியும் சத்தம் எழுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது. அகோரி மணிகண்டன் ஏற்கனவே இதனை போல பூஜைகளில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இது போன்ற பூஜைகள் வடமாநில இடங்களில் மட்டுமே நடைப்பெற்றுள்ளது. ஆனால் தற்போது திருச்சி சுடுகாட்டில் நடந்தது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |