ஓடும் பேருந்தில் ஊழியர் ஒருவர் இறந்து கிடந்ததை கூட அறியாத சகபயணிகள் சடலத்துடன் சுமார் 6 மணி நேரம் பயணம் செய்த சம்பவம் தொடர்பில் அவருடைய மகன் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஸ்விட்சர்லாந்திலுள்ள சூரிச்சில் பேருந்து ஒன்றில் பயணம் செய்த 64 வயதாகும் De sando என்பவர் திடீரென உயிரிழந்துள்ளார். ஆனால் இதனை கூட கவனிக்காத சக பயணிகளும், பேருந்து அலுவலர்களும் சடலத்துடன் 6 மணி நேரம் பயணம் செய்துள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து அவருடைய மகன் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஓடும் பேருந்தில் உயிரிழந்த de sando சூரச்சிலுள்ள ஆயத்த ஆடை நிறுவனமொன்றில் சுமார் 40 ஆண்டுகளாக தையல்காரர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வாழ்நாளில் பணிபுரிவதற்கு ஒருமுறை கூட நேரம் தவறி சென்றதே இல்லையாம். ஆனால் சம்பவத்தன்று அவர் நீண்ட நேரமாகியும் நிறுவனத்திற்கு பணிபுரிய செல்லாததால் நிறுவனத்தார்கள் de sando வினுடைய மகனுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.
இதனால் அச்சமடைந்த de sando வின் மகன் தன்னுடைய தந்தை நீண்ட நேரமாகியும் பணிபுரியும் நிறுவனத்திற்கு செல்லவில்லை என்று காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில் செவிலியர் ஒருவர் de sando இறந்து கிடந்த பேருந்தில் ஏறியுள்ளார். அதன்பின் de sando கவிழ்ந்து கிடந்ததால் சந்தேகமடைந்த செவிலியர் அவரை பரிசோதனை செய்த பின்னரே அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.