அன்னாசிபழம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வைக்கும். உடலை சுறுசுறுப்பாக வைத்துகொள்ளவும் அன்னாசிபழம் உதவுகிறது .
இந்த பழம் புரதம் , நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ , வைட்டமின் சி,வைட்டமின் பி-5, பீட்டா- கரோட்டின், தையாமின், பொட்டாசியம், மெக்னீசியம் ,காப்பர் மற்றும் மாங்கனீஸ் சத்துக்களைக் கொண்டது .
மூட்டுக்களில் தேய்மானம் ஏற்படும் போது உண்டாகும் வலியினை குறைக்கிறது. மூட்டுவலிக்கு ஒரு நல்ல நிவாரணமாக உள்ளது .
உடலுக்கு நோய்எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது .அன்னாசி பழத்தில்அதிக அளவு வைட்டமின் சி இருப்பதனால் உடலில் ஏற்படும் காயங்களை விரைவாக குணமடைகிறது. இதில் அதிகஅளவு கால்சியம் ,மெக்னீசியம் இருப்பதனால் எலும்புகளுக்கு வலிமையினை கொடுக்கிறது .
அதிகமாக நார்சத்து இருப்பதனால் ஜீரணக்கோளாறு சரியாகி மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது .மேலும் இது உடல் எடையை குறைக்கிறது .இதயத்தை பாதுகாக்கிறது,ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது .
வைட்டமின் ஏ அதிகம் இருப்பதினால் பார்வைக்கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படாமல் காக்கிறது .ஆன்டிஆக்ஸிடென்ட் அதிகமாக இருப்பதினால் புற்று நோய் வராமல் பாதுகாக்கிறது .