Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

சிறு பிஞ்சு குழந்தைகளின் மனஅழுத்தம் போக்க மசாஜ் செய்யுங்கள்..!!

குழந்தைகளின் புத்துணர்வுக்கும், நிம்மதியான தூக்கத்திற்கும் எண்ணெய் மசாஜ் செய்தால்  மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பொதுவாகவே அணைத்து குழந்தைகளுக்கும் பொழுது போக்கிற்காக ஏதும் இல்லை என்றால் மன அழுத்தம் அதிகமாகும். இதனால் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதனால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலவிதமான நன்மைகள் ஏற்படும். குறிப்பாக குழந்தையின் உணவு செரிமானம் மற்றும் இரத்த ஓட்டம் வளர்ச்சி ஆகியவற்றிற்கு பெரும் பங்காற்றுகிறது.

குறைப் பிரசவமாக  பிறந்த பிஞ்சு குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கும், குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும் உறுதுணை புரியும்.  இவ்வாறு மசாஜ் செய்வதினால் ஆஸ்துமா மற்றும் சரும பிரச்சனைகளினால் அவதிப்படும் குழந்தைகளுக்கும் இது மிகமுக்கிய பிளான் அளிக்கும். அதுமட்டுமின்றி மனஅழுத்தம் குறைந்து உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும்.

ஆட்டிஸம்மால் பாதிப்படைந்த குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதன் மூலம் அவர்களுடைய தூக்கத்தை மேம்படுத்தவும் உதவும்.  குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும். பொதுவாக குழந்தைகளுக்கு 15-20 நாட்களிலேயே மசாஜ் செய்ய ஆரம்பித்து விடுங்கள். மசாஜ் செய்த பிறகு வெதுவெதுப்பான தண்ணீரால் குளிப்பாட்டி விடுவதன் மூலம் குழந்தைகளுக்கு நல்ல நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.

 

Categories

Tech |