ராசல் கைமாவிலுள்ள ஏரியானது இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
ராசல் கைமா பகுதியில் இளஞ்சிவப்பு நிறத்தில் தென்படும் ஏரியின் புகைப்படத்தை பார்த்து அனைவரும் வியந்து வருகின்றனர்.அம்மார் அல் பர்சி என்ற மாணவர் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் தனது ஆளில்லா விமானம் மூலம் ராசல் கைமா ட்ரம்ஸ் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடற்கரை பகுதியில் தீவில் ஆளில்லா விமானத்தை வைத்து சோதனை செய்த போது எதிர்பாராத வகையில் ஏரி ஒன்று இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.
இதை கவனித்த போது ஏரியின் அகலம் 10 மீட்டர் ஆகவும், நீளம் 40 மீட்டர் ஆகவும் இருந்தது. இந்த ஏரியை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த படங்கள் அனைத்தும் வைரலானது. ஹாலோ பாக்டீரியா மற்றும் துனெலியல்லா சலினா என்ற பாசியின் காரணமாகவும், சிவப்பு பாசியில் இருந்து சுரக்கும் நிறமியின் காரணமாகவும் இந்த ஏரியானது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. மேலும் இதுபோன்ற சூழ்நிலையானது குறிப்பாக குளிர்காலத்தில் மட்டுமே அதிகமாக இருக்கும்.