நடிகை பிந்து மாதவி காதலில் விழுந்ததாகவும், அந்த அனுபவம் பற்றியும் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
பிந்து மாதவி ரசிகர்களுடன் உரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு சமூக வலைதளத்தில் ஏற்பாடு செய்த்திருந்தார். அப்பொழுது அவரிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் காதலில் விழுந்த அனுபவம் பற்றி கூறுங்கள் என கேட்டார். அதற்கு அவர் அதை காதல் என்று சொல்வதா என தெரியவில்லை. ஆனால் ஒருவர் மீது சீக்ரெட் கிரஷ் இருக்கிறது எனவும் அதை யாரிடமும் சொன்னது இல்லை எனவும் கூறினார்.
மேலும் உடனே இதற்கு காதல் சாயம் பூசி, நானும் காதலிக்கிறேன் என சொல்லிவிட முடியாது. இது ஒரு ஈர்ப்புதான். அதேபோல், நான் எந்த கமிட்மென்ட்டுக்கும் ஆளாகவில்லை. எனவே இப்போதைக்கு சிங்கிளாகவே இருக்கிறேன் என்று பதில் அளித்தார் பிந்து மாதவி.