Categories
உலக செய்திகள்

“பிரபல நிறுவனத்தின் தடுப்பூசி”… அங்கீகாரம் வழங்கிய கனடா… 10 மில்லியன் டோஸ் தடுப்பூசி ஆர்டர்…!!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு கனடா அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் பிரபல மருந்து நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்துள்ள தடுப்பூசிக்கு குறிப்பிட்ட சில நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்நிலையில் கனடா அரசாங்கமும்  ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் சிங்கிள் டோஸ் தடுப்பூசியை அவசரகால தடுப்பூசியாக அங்கீகரித்துள்ளது.  இதற்கு முன்பு கனடாவில் பைசர்- பயோ என் டெக், மாடெர்னா, அஸ்ட்ரோஜெனேகா ஆகிய 3 தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி நான்காவது தடுப்பூசியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே கொரோனாவுக்கு எதிராக 4 நிறுவன தடுப்பூசிகளை அங்கீகரித்த முதல் நாடாக திகழ்கிறது கனடா. 10 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு கனடா ஆர்டர் செய்துள்ளது. நடப்பு ஆண்டின் செப்டம்பர் மாத இறுதிக்குள் 10 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளும் வந்து விடும் என்று கனடா எதிபார்த்துக்கொண்டிருக்கிறது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |