பிரபல இயக்குனர் படத்தில் நடித்து வருவதாக பிக்பாஸ் சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி கடந்த 1991 ஆம் ஆண்டு கே. பாலச்சந்திரனின் ‘அழகன்’ படத்தில் அறிமுகமானார் . இவர் நடிகராக மட்டுமல்லாது இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகத் தன்மையுடையவர் . இதையடுத்து சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் .
மேலும் சமையல் கலைஞரான சுரேஷ் சக்கரவர்த்தி சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் பிரபல இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி இணைந்துள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . இதையடுத்து அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.