இந்தி படம் மற்றும் தொலைக்காட்சிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் உர்பி ஜாவித். இவருடைய சமூகஊடக பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் நிறைந்து, ரசிகர்களை கவர்ந்திழுக்கும். அதே நேரம் இவரை பிடிக்காத சிலரும் இருக்கின்றனர். இந்நிலையில் உர்பி ஜாவித்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசிய மர்மநபர், தொடர்ந்து உர்பி ஜாவித்துக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் உர்பி ஜாவித்துக்கு அந்நபர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தும் பேசி உள்ளார். இது தொடர்பாக மும்பை கோரேகாவன் போலீஸ் நிலையத்தில் உர்பி ஜாவித் புகார் அளித்துள்ளார்.
அத்துடன் மிரட்டல் விடுத்த தொலைபேசி பேச்சுகள் அடங்கிய பதிவுகளையும் காவல்துறையினரிடம் அளித்துள்ளார். இதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அந்நபர் நவீன் கிரி என தெரியவந்தது. அதன்பின் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் நவீன் கிரி மீது பாலியல் துன்புறுத்தல், பின் தொடருதல் மற்றும் குற்ற நோக்கோடு மிரட்டல் விடுத்தல் ஆகிய பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்ற்கொண்டு வருகின்றனர்.