நடிகை திரிஷா பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத் திரையுலகில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் ,மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘லூசிபர்’ . இந்தப் படம் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது . தற்போது இந்த திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்ய்யப்படவுள்ளது . இந்த படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கவுள்ளார் . இதில் மோகன்லால் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார் . மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் , நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது .
இது ரீமேக் படமாக இருந்தாலும் இயக்குனர் மோகன் ராஜா இதில் சில மாற்றங்கள் செய்துள்ளார் . குறிப்பாக இந்த படத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு காதல் காட்சிகளை இணைத்துள்ளதாக கூறப்படுகிறது . இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஏற்கனவே சிரஞ்சீவியும் திரிஷாவும் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்டாலின்’ என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது .