Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கீர்த்தி… டுவிட்டரில் வெளியிட்ட கருப்பு-வெள்ளை புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . கடைசியாக இவர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான பெண் குயின் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது . தற்போது இவர் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த மற்றும் செல்வராகவனின் சாணிக் காயிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் . மேலும் தெலுங்கில் குட் லக் சக்தி , ரங் டே மலையாளத்தில் மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கீர்த்தி நடிகர் விக்ரம் பிரபுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . நிகழ்ச்சி ஒன்றில் விக்ரம் பிரபுவுடன் கீர்த்தி கலந்து கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கருப்பு-வெள்ளை புகைப்படமாக மாற்றி வெளியிட்டுள்ளார். நடிகர் விக்ரம் பிரபு மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இருவரும்  ‘இது என்ன மாயம்’ படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |