நடிகர் பிரபாஸ் கேஜிஎஃப் இயக்குனர் இணையும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.
‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் ரசிகர்களை பெற்றவர் நடிகர் பிரபாஸ் . இந்த படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியான படம் ‘சஹோ’. அடுத்ததாக இவர் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்துள்ளார். இதன்பின் பிரபாஸ் நடிக்கும் படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார் . இந்தப் படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார். இதையடுத்து நடிகர் பிரபாஸ் பல மொழிகளில் தயாராகும் ‘ஆதிபுருஷ்’ என்ற பிரம்மாண்ட படத்தில் நடிக்கவுள்ளார்.
https://twitter.com/prashanth_neel/status/1349976826261618690
சமீபத்தில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ள ‘சலார்’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது . இந்நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதில் முக்கிய விருந்தினராக பிரபல நடிகர் யாஷ் கலந்து கொண்டுள்ளார். மேலும் சில முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.