Categories
தேசிய செய்திகள்

தீவிர கோமா நிலையில்… மருத்துவ நிர்வாகம் பரபரப்பு…!!

முன்னாள் குடியரசுத் தலைவர் உடல்நிலை குறித்து ராணுவ மருத்துவ நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் சிகிச்சை குறித்த விவரங்களை அவ்வப்போது மருத்துவம் நிர்வாகம் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. இக்கட்டான நிலையில் சிகிச்சை பெற்று வரும் குடியரசுத் தலைவரின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து ராணுவ மருத்துவ நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தற்போது மிகத் தீவிரமான கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், தொடர்ந்து நுரையீரல் தொற்றுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரணாப் முகர்ஜி சென்ற 13 நாட்களாக மருத்துவமனையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |