பிரண்டையை அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. எலும்புகளையும், பற்களையும் வலுவாக்கும் ஆற்றல் கொண்ட பிரண்டை அனைத்து வயதினருக்கும் ஏற்றது. மூட்டுகளில் வீக்கம், மூட்டு வலி மற்றும் சுளுக்கு ஆகியவற்றை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது. குறிப்பாக மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டை ஈடுகட்ட பிரண்டை மிகவும் உதவியாக இருக்கும். வயிற்றுப்புண்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது. பிரண்டை ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பிரண்டை – 1 கப்,
பெருங்காயம் – 1 சிட்டிகை,
சீரகம் – ½ ஸ்பூன்,
நெய் – 1 ஸ்பூன்,
கடுகு – 1 ஸ்பூன்,
மிளகு – 1 ஸ்பூன்,
எலுமிச்சை சாறு – சிறிது
பாசிப்பருப்பு – ¼ கப்,
மஞ்சள்தூள் – ¼ ஸ்பூன்,
கொத்தமல்லி இலை – சிறிது,
உப்பு – தேவையானஅளவு.
செய்முறை :
முதலில் பாசிப்பருப்பை, மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் கப் தண்ணீர் சேர்த்து, உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில் நெய் சேர்த்து கடுகு போடுங்கள். கடுகு வெடித்ததும், சுத்தம் செய்த பிரண்டைத் துண்டுகளை போட்டு நன்றாக வதக்குங்கள்.
பிரண்டை நன்றாக வதங்கியதும், பருப்புத் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விடுங்கள். பிரண்டை நன்றாக வெந்து கொதித்ததும், அடுப்பை அனைத்து எலுமிச்சை சாறை சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் கொத்தமல்லி இலைகளைத் தூவி பரிமாறுங்கள். இதனை சாதத்துடன் பரிமாறலாம் அல்லது அப்படியே சூப் போலவும் பருகலாம்.