இயக்குனர் சுந்தர் .சியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை அவரது மனைவி குஷ்பு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் கடந்த 1995ஆம் ஆண்டு ‘முறைமாமன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி . இந்த படத்தில் குஷ்பூ, கவுண்டமணி, ஜெயராம், மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் போது சுந்தர் சி க்கும் நடிகை குஷ்புவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து 5 வருடங்கள் கழித்து இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர் . இதன்பின் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உள்ளத்தை அள்ளித்தா, அன்பே சிவம், அருணாச்சலம் போன்ற திரைப்படங்கள் வெளியானது.
Our strength. Our world. Happy birthday love. ❤❤❤🎂🎂 pic.twitter.com/42y7qZLyc5
— KhushbuSundar (@khushsundar) January 20, 2021
ஆனால் இந்த படங்களை விட இவர் இயக்கத்தில் வெளியான மேட்டுக்குடி, லண்டன், நாம் இருவர் நமக்கு இருவர், கலகலப்பு போன்ற காமெடி படங்கள் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . கடந்த 2020இல் ‘தலைநகரம்’ படத்தின் மூலம் நடிப்பிற்கு அறிமுகமான சுந்தர் சி இதைதொடர்ந்து அரண்மனை வெர்ஷன் படங்களில் கலக்கி வருகிறார் . இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி தனது பிறந்த நாளை அவரது காதல் மனைவி குஷ்பு மற்றும் மகள்களுடன் கொண்டாடியுள்ளார் . இந்த கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .