அமெரிக்கா 10 கோடி கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிக அளவில் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் அனைத்து நாடுகளும் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளன. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்தை எட்டியுள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பெரும் மடங்காக அதிகரித்துள்ளது. அதனால் கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு அமெரிக்கா மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றது.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சனோபி, கிலாக்சோஸ்மித்கிளைன் ஆகிய மருந்து உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொரோனா தடுப்பு ஊசியில் 10 கோடி ‘டோஸ்’ கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க அரசு பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.