பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரான்சின் Perpignan நகரில் Alain என்ற 49 வயதுடைய நபர் வசித்து வருகிறார். 300 கிலோ எடையுள்ள இவர் சென்ற ஆறு மாதங்களுக்கு முன்னர் தனது கட்டிலிலிருந்து கீழே விழுந்துள்ளார். அதன்பின் அவரால் எழுந்து மீண்டும் கட்டிலில் படுக்க முடியாததால் அவர் தரையிலேயே ஆறு மாதங்களாக படுத்து கொண்டிருக்கிறார். அவருக்கு வேண்டிய உதவிகளை அவரின் சகோதரர் ஒருவர் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவரை விரைவில் மருத்துவமனையில் சேர்ப்பதற்கு காவல்துறையினர் அனுமதி அளித்திருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து அவரை தூக்கி வருவதற்கு சிறப்பு கட்டில் மற்றும் நோயாளி தள்ளுவண்டி ஆகியவை தயார் செய்யப்பட உள்ளன. மேலும் அவரின் வீட்டு ஜன்னலை உடைத்து அதன் வழியாக அவரை வெளியே அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.