பிரான்ஸ் நகரம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நடமாடுவதாக வதந்தி பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
உலக சினிமா விருதுகள் வழங்குவதற்கு புகழ்பெற்ற நகரமான cannes-இல் நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் மக்கள் அனைவரும் பயத்தில் அங்கும் இங்கும் ஓடியுள்ளனர். அப்போது பலர் படுகாயம் அடைந்ததாக அவசர உதவி சேவைகளின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் அப்படி ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் அந்த பகுதியில் நடைபெறவில்லை என்றும், யாரும் துப்பாக்கியுடன் நடமாட வில்லை என்றும் நகர மேயர் David Lisnard கூறியுள்ளார். மேலும் யாரோ ஒருவர் துப்பாக்கிச் சூடு நடக்கிறது என்று கூச்சலிட்டதால் இத்தகைய அசம்பாவிதம் நடந்ததாக அவர் கூறியுள்ளார்.
அந்தப் பகுதி முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயுதங்கள் தாங்கிய காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த வீடியோ ஒன்றில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் பயத்தில் அலறிக்கொண்டு ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு ஓடுகையில் பலருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்னரே பலமுறை குண்டுவெடிப்புகள், துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதை தொடர்ந்து மக்களிடம் தற்போது வரை பயம் நிலவி கொண்டிருப்பதாலேயே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.