பிரண்டை தோசை
தேவையான பொருட்கள் :
பச்சரிசி – 2 கப்
புழுங்கலரிசி – 2 கப்
உளுத்தம்பருப்பு – முக்கால் கப்
பிரண்டை – அரை கப்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 3 மணி நேரம் ஊறவைத்து , ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும். மாவு பாதி அரைபட்டதும், பிரண்டையை நறுக்கி அதில் போட்டு மாவு பொங்கப் பொங்க அரைத்து உப்புப் போட்டுக் கரைத்துக் கொள்ள வேண்டும். மாவு 8 மணி நேரம் புளித்ததும் , தோசையாக வார்த்து சுட்டெடுக்கவும் .