Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விழாவிற்கு சென்ற உறவினர்கள்…. சாலையில் கவிழ்ந்த வேன்…. கடலூரில் பரபரப்பு….!!

பிறந்த நாள் விழாவுக்கு வேனில் சென்ற நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள திருவள்ளூரில் பத்மாவதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பேரனின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளுவதற்காக 35-ற்கும் அதிகமான உறவினர்களுடன் வேனில் வடகராம்பூண்டிக்கு புறப்பட்டுள்ளார். அப்போது மூன்று வயது மிக்க சிறுவன் சாலையில் குறுக்கே சென்ற நிலையில் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டுள்ளார்.

அந்த சமயத்தில் ஓட்டுனரின் செயல்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி கவிழ்ந்துள்ளது. இதில் வேனில் பயணித்த 38 நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |