நடிகர் விஜய் சேதுபதி தனது புதிய படத்தின் டைட்டிலை டுவிட்டரில் அறிவித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தளபதி விஜயுடன் இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துள்ளார். இந்நிலையில் இன்று நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை முன்னிட்டு அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
"At times Silence is so loud". On the occasion of my birthday. I am announcing my new film's poster. I am set for a new challenge and new beginning with a silent film #GANDHITALKS Need your love and blessings. 🙏🙏 @kishorbelekar @divay_dhamija @moviemillent pic.twitter.com/5NtrAD5t4d
— VijaySethupathi (@VijaySethuOffl) January 16, 2021
தமிழ், ஹிந்தி, தெலுங்கு ,மலையாளம், கன்னடம், மராத்தி ஆகிய ஆறு மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்திற்கு ‘காந்தி டாக்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது . இயக்குனர் கிஷோர் பண்டுரங் பெலேகர் இயக்கவுள்ள இந்த படத்தை மூவி மில் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது . டுவிட்டரில் விஜய் சேதுபதி வெளியிட்ட இந்த படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது . மேலும் விரைவில் இந்த படம் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது .