பிறந்தநாள் கொண்டாட்டம் எங்கிருந்து உருவாகி இன்று நாம் கொண்டாடுகிறோம் என்று பார்ப்போம்.
பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு நோய் என்று சொல்கிறார்கள். ஆமாம் ஒரு நோயில் இருந்து பிறந்ததுதான் பிறந்தநாள் கொண்டாட்டம். பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழ் பண்பாடு இல்லை, இது ஒரு ஐரோப்பிய பண்பாடு ஆகும். கிபி 1347ம் ஆண்டு ஒரு மர்ம நோய் ஐரோப்பிய மக்களை பயங்கரமாக தாக்கியது. எப்படி கொரோனா நம்மை பாடாய் படுத்துகிறது, அதே மாதிரி ஒரு மர்ம நோய் அப்போவே ஐரோப்பிய மக்களை ஒரு வழி படுத்திருக்கிறது.
எந்த அளவிற்கு அதோட பாதிப்பு இருக்கிறது என்று பார்த்தால் தேவைப்பட்ட மனுஷன் கிட்டதட்ட ஐரோப்பிய கண்டத்தில் மட்டும் 2.5 கோடி மக்கள் அந்த அந்த நோயால் அழிந்து போயிருக்கிறார்கள். இது அப்போதைய மக்கள் தொகைக்கு ரொம்பவே அதிகம். இந்த நோயை பற்றி கொஞ்சம் சீரியஸாக பேசினால், பிறந்த குழந்தை அது பிறந்த தேதியிலிருந்து ஒரு வருடம் முடிவதற்கு முன்பே இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போய்விடும்.
அப்படி பிறந்த தேதியை தாண்டி ஒரு வருஷத்துக்கு மேல அந்த குழந்தை உயிர் வாழ்ந்தால் அதை பெரிய சாதனையாக அந்த கண்டத்தில் உள்ள மக்கள் கொண்டாடி வந்தார்கள். ரொம்ப பயங்கரமான இந்த நோய்க்கு அந்த கண்டத்தில் இருந்த மக்கள் கருப்பு மரணம் என்று அழைத்துள்ளனர். கிபி 1347 லிருந்து கிபி 1894 வரைக்கும் இதே நீடிக்க, மக்களுக்கு ஏற்ற பிள்ளைகளாக நாம் பிறக்கவில்லை என்று மத பிரச்சாரம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள் ஒருபக்கம்.
இப்படி என்ன நோய் என்று தெரியாம மக்களின் பயத்தை அறியாமை மட்டும் பயன்படுத்தி கடவுள் பெயரை வைத்து மதபோதகர்கள் ஊரை ஏமாற்றி வைத்துக் கொண்டிருந்த அந்த சூழ்நிலையில் தான் கிபி 1894 இல் அலெக்ஸெண்டரி பிரெஞ்சு பாக்ட்ரியாலிஸ்ட் இது ஒரு இறந்த எலியின் உடலிலிருந்து பரவுகிறது என்று கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்த நோய் வேறு எதுவுமில்லை பிளேக் இன்று நாம் சொல்லக்கூடியது.
இது இப்பொழுது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அது அந்த கண்டத்து மக்களே கலங்க வைத்திருக்கிறது. இதுக்கு முன்னால இந்த கொடூர நோய் கிட்ட இருந்து தப்பித்து ஒரு குழந்தை உயிரோடு ஒரு வருஷத்தில் தாண்டி வாழ்ந்து வந்தால், அது பெரிய சாதனையாக கருதி அந்த கண்டத்தின் மக்கள் கொண்டாடுவார்கள். ஆமாம் அதுதான் அவர்களுடைய பிறந்த நாள் கொண்டாட்டம்.
தன்னுடைய மகனோ, மகளோ ஒரு கொடூர நோய் கிட்டே இருந்து தப்பிச்சு ஒரு வருடத்திற்கும் தாண்டி உயிர் வாழ்ந்து இருக்கிறதுக்கு, கடவுள்கிட்ட நன்றி சொல்லும் விதமாகவும் அவர்கள் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாடி வந்தார்கள். சரி இது ஐரோப்பிய பண்பாடு தானே இது எப்படி தமிழநாட்டிலும், இந்தியாவிலும் பரவியது. நம்மை அப்பொழுது பிரிட்டிஷார் ஆட்சி செய்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் ஐரோப்பியர்கள் வணிகர்கள் தமிழ்நாட்டில் வணிகம் செய்ய கடல் மூலமாக வருவார்கள்.
அப்படி வந்த இடத்தில் அவர்களிடம் இருந்த இந்த பிறந்தநாள் கொண்டாட்டம். நமது பக்கம் வந்திருச்சு இந்த கொண்டாட்டம் நம்மகிட்ட பரவ ஆரம்பித்த ஆரம்ப காலகட்டத்தில் ஹாப்பி பர்த்டே டூ யூ என்று வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டிருந்தோம். இப்படி ஆங்கிலத்தில் வாழ்த்து சொல்லிக்கொண்டு இருந்த நம்மை இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று ஒருவர் சொல்ல வச்சாரு. அதுக்கு ஒரு குட்டி கதை இருக்கு…
டிவியில் வர்றதுக்கு முன்னாடி அந்த காலத்து மக்களுக்கு பொழுதுபோக்கு விஷயம் ரேடியோ தான். டிவி ஆங்கர் பண்ற மா.கா.பா, பிரியங்கா இவர்களுக்கெல்லாம் ரசிகர்கள் அதிகமாக இருப்பார்கள். அதே மாதிரி ரேடியோவுல அந்த காலகட்டத்தில் கொடிகட்டி பறந்தவர் அப்துல் ஹமீது என்பவர்தான். இவர் இலங்கையில் இருக்கக்கூடிய ஒரு பிரபல ரேடியோ ஸ்டேஷனில் ஹார்ட் வொர்க் பண்ணிட்டு இருந்தாரு. நாளுக்கு நாள் மக்களிடம் புதுப்புது விஷயங்களை ஷேர் பண்ணுவார்.
அப்படித்தான் ஹாப்பி பர்த்டே டூ யூ அப்படிங்கறதுக்கு மொழிபெயர்ப்புனு சொல்லிட்டு “பிறந்தநாள் இன்று பிறந்தநாள் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்” என்று ஒரு தமிழ்ப் பாட்டை பாடி” இன்றைக்கு தமிழ் மக்களை பிறந்தநாளன்று இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று சொல்ல வைத்த பெருமை அவருக்கு தான் சேரும். ஐரோப்பிய கண்டத்தில் உள்ள இங்கிலாந்தில் உருவான பிளேக், மெக்சிகோவில் உருவான சின்னம்மை, ஸ்பெயினில் உருவான புஃளு, அமெரிக்காவில் உருவான எய்ட்ஸ்,
இந்தியாவில் உருவான காலரா, சவுதி அரேபியாவில் உருவான கொரோனா குடும்பத்தை சேர்ந்த மெர்ஸ், ஆப்பிரிக்காவில் உருவான எகோலோ இவையெல்லாம் கவனித்தீர்கள் என்றால் அத்தனை நோயும் பல கோடி மக்கள் உயிரை வாங்கிட்டுதான் போயிருக்கிறது. ஆனாலும் உலக மக்கள் அந்த நோயிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். இன்றளவும் மனித இனம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அது போல தான் இந்த கொரோனா வைரசும் இது நிறைய பாதிப்புகளை நம்மிடம் ஏற்படுத்தியிருக்கலாம்.
பல உயிர்களை பலி வாங்கி விட்டு போய் இருக்கலாம். ஆனால் இதிலிருந்தும் உலக மீண்டு வருவார்கள். இதற்கு நாம் இப்பொழுது செய்ய வேண்டியது நம்முடைய குழந்தைகளோடும், சொந்தங்களும் ஊரடங்கு முடியிற வரைக்கும் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருப்போம். அவர்களோடு நேரம் செலவிடுவோம். பின்னாடி வெளியில் போகும்பொழுது சமூக இடைவெளியை கடைபிடிப்போம்.
வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது வாசலிலே கை,கால்களை கழுவிவிட்டு உள்ளே போகவேண்டும். எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்க முடியுமோ அந்த அளவுக்கு பாதுகாப்பாக இருப்போம். இந்தக் கொரோனோவை பார்த்து அதிகளவு அச்சப்பட வேண்டாம். அதேசமயம் சிறு அலட்சியம் கூட வேண்டாம். கொரோனோவை விரட்டுவோம் கொரோனோவிற்கு பின் அமைதியான புதிய வாழ்க்கையைத் தொடங்குவோம்.
https://youtu.be/pAoH76MR8fg