ராஜஸ்தானில் பிறந்த பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர்.
ராஜஸ்தானில் நாகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அந்த குழந்தையை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அந்தப் பச்சிளம் குழந்தையையும் தாயையும் அழைத்து வந்துள்ளனர்.
இதுபற்றிய குழந்தையின் தாத்தா மதன்லால் எங்கள் குடும்பத்தில் 35 வருடங்களுக்கு பின்னர் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் அதனால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் அதனால் தான் இந்த ஏற்பாடுகள் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இக்குழந்தை எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு எனவும் கூறியுள்ளார். அவள் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்ற இருப்பதாக மிகுந்த சந்தோஷத்துடன் அனைவரிடமும் கூறினார்.