Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பார்த்ததும் பதறிய பொதுமக்கள்… கருகிய நிலையில் பச்சிளம் குழந்தை… வேலூரில் பரபரப்பு…!!

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கருகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகில் கருகி எரிந்த நிலையில் அட்டைப்பெட்டி ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது பெட்டிக்குள் பச்சிளம் குழந்தை கருகி இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

ஆனாலும் காவல்துறையினருக்கு அந்த குழந்தை தகாத உறவில் பிறந்து கொலை செய்ய பட்டதா அல்லது இறந்த குழந்தை எரிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்குள் பிறந்த குழந்தைகளின் விவரங்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |