Categories
இந்திய சினிமா சினிமா

தினமும் 5ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை..!!

பிரபல நடிகை ரோஜா, சாரிடபுள் டிரஸ்ட்”மூலம் 5ஆயிரம் பேருக்கு உணவு  வழங்குகிறார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 144 உத்தரவு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதனால் நகரி மற்றும் புத்தூர் நகர சபைகளில் பணிபுரியும்  ஊழியர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு என்பது பிரச்சினையாகவே உள்ளது. ஒரு ஆண்டிற்கு மேலாகவே நகரி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான உணவு  ரூ.4-க்கு வழங்கி வருகிறார்.

மருத்துவமனையில் உள்ள  அனைவருக்கும்  தினமும்  5 ஆயிரம் பேருக்கு கூடுதலாக உணவு தயாரித்து ‘ரோஜா சாரிடபுள் டிரஸ்ட்’ மூலம் ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கிட முடிவு செய்து வழங்கி  வருகிறார். “என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்” என்று அவர் கூறினார். செல்வந்தர்கள் அனைவரும் இப்படிப்பட்ட பேரிடர் நிலையில், ஏழைகளை காக்க உதவி செய்ய முன்வர வேண்டும்என ரோஜா அழைப்பு விடுத்தார்.

Categories

Tech |