Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருக்கு டும் டும் டும்….. நவ. 19 ஆம் தேதி முதல் திருமண கொண்டாட்டம் ஆரம்பம்….. ரசிகர்கள் வாழ்த்து…..!!!!!

தெலுங்கு நடிகரான நாக சவுர்யாவுக்கு வருகிற 20ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

இயக்குனர் விஜய் தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் “தியா” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் நாக சவுர்யா நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 25 தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது திருமணம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. இவர் திருமணம் செய்யும் மணப்பெண் அனுஷா ஷெட்டி ஆவார்.

இந்தப் பெண் பெங்களூரை சேர்ந்தவர் மற்றும் இன்டீரியர் டெக்கரேஷன்
துறையில் பணிபுரிந்து வருகின்றார். இவர்களது திருமணம் பெங்களூரில் வைத்துதான் நடைபெற உள்ளது. இந்த திருமணம் ஆனது காதல் திருமணமா? இல்லை நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |