கடலூர் அருகே போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற முக்கிய குற்றவாளி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திருப்பதிரிபுலியூர் சுப்பராயலு பகுதியில் வீரா என்கிற வீரங்கையன் 30 வசித்து வருகிறார். இவர் ஒரு பிரபல ரவுடி. வீரா மீது போலீஸ் நிலையத்தில் பல கொலை- கொள்ளை சம்பவம் குறித்த வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடலூர் உழவர்சந்தை பக்கத்தில் வீராவுக்கு சொந்தமான பழக்கடை ஒன்று இருந்தது வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு நேற்று இரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். திடீரென அங்கு 10 பேர் கொண்ட பயங்கர கும்பல் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்து வீராவை பின்தொடர்ந்தனர் ஆனால் அதனை வீரா கவனிக்கவில்லை. வீராவை பின் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல் திடீரென சுப்பராயலு தெருவில் அவரை சுற்றி வளைத்தது. பின் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வீராவை சரமாரியாக வெட்டி வீழ்த்தினர் ரத்த வெள்ளத்தில் போராடிய வீர அங்கேயே உயிரிழந்தார்.
அப்போதும் ஆத்திரம் அடங்காத கும்பல் வீராவின் தலையை வெட்டி அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டின் முன் எரிந்தார்கள். இரவு நேரத்தில் வீரா தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இச்சம்பவம் அறிந்து போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பிறகு கடலூர் மாவட்ட காவல்துறை இதை பற்றி விசாரணை நடத்தியது . பிறகு வீராவை கொலை செய்து தப்பியோடிய மர்ம கும்பல்களை பிடிக்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் போலீசார் எச்சரிக்கைபடுத்தி தீவிர வாகன சோதனை நடத்தி வந்தனர்.
இதனால் கடலூர் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர் தப்பிச் சென்ற மர்ம கும்பல் பண்ருட்டி அருகே உள்ள மலட்டாறு பகுதியில் பதுங்கி உள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பின் போலீஸ் அங்கு சென்று கும்பலை பிடிக்க முயன்ற போது அவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்கள் . பின்னர் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது அதில் ரவுடி போலீசை அரிவாளால் வெட்ட வந்தனர். அப்பொழுது போலீஸ் ஒரு ரவுடியை துப்பாக்கியால் சுட்டார். அந்த ரவுடி அங்கேயே உயிரிழந்தார். அவ்வாறு உயிரிழந்தவர் கிருஷ்ணா 30 எனவும் அவர் குப்பங்குளத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஆவர் . அவருக்கும் வீராவிற்கும் பலகாலமாக விரோதம் இருந்ததாகவும் அதனால் தான் வீராவை கொலை செய்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.
என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி கிருஷ்ணா உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரத்தில் உள்ள முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அந்த கும்பலில் உள்ள ஆறு பேரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் கடும் விசாரணை நடத்தி வருகின்றனர்.இவ்வாறு இரவு நேரத்தில் ஊருக்குள் நடந்த இக்கொலை சம்பவம் குறித்து அந்த சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.