கர்நாடக மாநிலத்திலுள்ள மஞ்சுநாதர் கோவில் சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் விஷால்.
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஷால். இவர் கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூர் அருகே மஞ்சுநாதர் திருக்கோவிலுக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். பின்னர் சுவாமி தரிசனம் செய்ததுடன் யானையிடம் ஆசிர்வாதம் வாங்குவது, கோவில் குளத்திலுள்ள மீன்களுக்கு உணவளித்தது போன்ற விஷயங்களை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து 11 ஏழைகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் விரைவில் காதல் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார். இந்த ட்ரிப் குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “காசி நகரை மேம்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி” என்று அவர் கூறியுள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி ட்வீட் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.