Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி ஒரு கோழை… ராகுல்காந்தி விமர்சனம்…!!!

இந்திய பிரதமர் மோடி ஒரு கோழை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் எம்.பி ராகுல்காந்தி  பாதுகாப்புத்துறை மந்திரி கிழக்கு லடாக் எல்லை தொடர்பாக சில அறிக்கைகளை வெளியிட்டார். அதில் நமது படைகள் பிங்கர் -3 மலைப்பகுதியிலும் பிங்கர்-4 நமது பிராந்தியம் என்று கூறினார். பிங்கர்-4 பகுதியிலிருந்து பிங்கர்- 3 பகுதிக்கு நமது படைகள் சென்றுள்ளனர் என்று கூறினார். சீனாவிற்கு ஏன் நமது பிராந்தயத்தை பிரதமர் மோடி விட்டுதந்தார். இந்தியாவிற்குள் சீனா நுழைந்த இடத்திலிருந்து மிக முக்கியமான டெப்சன் சமவெளியின் பாதுகாப்பும் பற்றி அமைச்சர் ஏன் எதுவும் பேசவில்லை.

இதிலிருந்து பிரதமர் மோடி இந்தியாவின் பகுதிகளை சீனாவிற்கு கொடுத்துள்ளார் என்பது தெரியவருகிறது. அதற்காக இந்திய மக்களுக்கு அவர் கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும். பிரதமர் மோடியால் சீனாவுக்கு எதிராக நிற்க முடியாது என்றும் மோடி ஒரு கோழை  என்று உறுதியாகக் கூறினார். மோடி நம் நாட்டின் ராணுவத்திற்கு துரோகம் செய்வதாகவும் ராணுவ வீரர்களின் தியாகத்தை அவமதிப்பதாகும் கூறினார். இவ்வாறு செய்யும் பிரதமர் மோடியை ஒருபோதும் இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி கூறினார்.

Categories

Tech |