ஜி-20 மாநாட்டின் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடந்து வந்து சல்யூட் வைத்த நிலையில் இருக்கையில் அமர்ந்தபடியே பிரதமர் மோடி ஹாய் சொன்ன சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைத்துள்ளது. இந்த நகரத்தில் ஜி-20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியுள்ளது. இந்த உச்சி மாநாடு 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு பாலி நகருக்கு சென்றுள்ளார். இதேபோன்று, மாநாட்டில் பங்கேற்க சீனா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற ஜி-20 அமைப்பின் தலைவர்களும் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதன் பின்னர் பாலி நகரிலுள்ள அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலில் ஜி-20 மாநாடு தொடங்கப்பட்டது. இந்த ஜி-20 மாநாட்டிற்கு வந்திருந்த தலைவர்களை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ முறைப்படி வரவேற்றார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் உரையாற்றியுள்ளனர். இந்நிலையில் இன்று 2வது நாள் ஜி20 மாநாடு துவங்கவுள்ளது. இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் அனைவரும் பாலிநகரிலுள்ள மாங்குரோவ் காட்டுக்கு விசிட் செய்துள்ளனர்.
அப்போது ஒவ்வொரு தலைவர்கள் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடியும் இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடந்து வந்து பிரதமர் நரேந்திர மோடியை பார்த்த ஜோ பைடன் புன்னகை செய்தார். மேலும் நடந்து வந்தபடியே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு “வணக்கம்” கூறும் வகையில் சல்யூட் செய்தார். இதனை கண்ட பிரதமர் மோடியும் கேசுவலாக அமர்ந்திருந்த இருக்கையில் உட்கார்ந்தபடியே கையை உயர்த்தி “ஹாய்” என சொன்னார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.