மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் பிரதமர் செபாஸ்டின் கர்ஸின் முறைகேடு குற்றச்சாட்டின் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரை செபாஸ்டின் கர்ஸின் மக்கள் கட்சிக்கு ஆதரவாக கருத்து கணிப்புகளை வெளியிடுவதற்காக பத்திரிகை ஒன்றுக்கு அரசு பணத்தில் இருந்து செலவிட்டு விளம்பரங்கள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இதனால் மக்கள் கட்சியின் தலைவர்கள் மற்றும் செபாஸ்டின் கர்ஸினுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் செபாஸ்டின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து அலெக்சாண்டர் ஷாலென்பர்க் நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். மேலும் இவர் தற்பொழுது வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது.