Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரார்த்தனை செஞ்ச அனைவருக்கும் நன்றி”…. என்னோட மகள் இப்ப நல்லா இருக்கா….. நடிகை ரம்பா உருக்கம்….!!!!

நடிகை ரம்பா ரசிகர்களிடம் சொல்லித் தெரிவித்துள்ளார். 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ரம்பா. ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர். இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் “உள்ளத்தை அள்ளி தா” என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். 90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தார். இவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி உருவாக்கியுள்ளனர். ரஜினி, சரத்குமார், கமல், அஜித் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். பின்னர் கனடா நாட்டின் தொழிலதிபரான இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் நடிகை ரம்பாவுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

அவ்வப்போது அவர் தனது கணவர் குழந்தைகளுடன் உள்ள புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்து வருவார். இதனை அடுத்து நேற்று திடீரென அவர் சென்ற கார் விபத்திற்குள்ளானதாக இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தானும் தனது இரு குழந்தைகளும் சிறிய காயங்களுடன் உயிர்தப்பியதாகவும், சாஷா என்ற குழந்தை மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார். சாஷா சீக்கிரம் குணமாகி வரவேண்டும் என எல்லோரும் என்னுடைய குழந்தைக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதன் பின்னர் ரம்பா தன்மகள் நலமுடன் இருக்கிறார் என்று இணையத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

Categories

Tech |