Categories
உலக செய்திகள்

பொழுது போக்கிற்காக சென்றோம்…. வலையில் சிக்கிய ராட்சத மீன்…. விற்பனை செய்த நண்பர்கள்….!!

அதிக எடையுடன் சிக்கிய மீனை இங்கிலாந்தைச் சேர்ந்த மூவர் 516000  ரூபாய்க்கு விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த Sean desuisa, Kyle kavila, மற்றும் Gareth valarino ஆகிய மூவரும் மீன் பிடிப்பதை பொழுதுபோக்காக வைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஜூலை 9 ஆம் தேதி இவர்கள் மூவரும் வழக்கம் போல் மீன் பிடிப்பதற்காக 15 அடி நீளம் கொண்ட படகில் கடலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும்போது வலையில் ஏதோ ஓன்று சிக்கியுள்ளது. அதனை உணர்ந்த மூவரும் வலையை இழுத்தபோது அதில் அதிக எடையுடன் கூடிய ஒரு மீன் இருந்துள்ளது. அதனை மூவரும் படகில் ஏற்றுவதற்கு போராடியுள்ளனர். ஏனெனில் படகு வெறும் 15 அடி நீளம் என்பதால் மீனை போராடி படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

இந்தநிலையில் அந்த மீனானது பெரிய உருவில் சுமார் 328 கிலோ எடையுடன் இருந்துள்ளது. அதன் பெயர் Bluefin Tuna Fish என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மூவரும் மீனை மூன்று பங்காக வெட்டி சந்தையில் சுமார் 5 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். மேலும் மீதி இருந்த மீனை தங்களின் வீட்டிற்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்து அளித்துள்ளனர். இதற்கு முன்னர் Bluefin Tuna Fish ஜப்பானை சேர்ந்த kiyoshi kimura என்பவரின் வலையில் சிக்கியது. அதன் எடை  278 கிலோவாக இருந்தது. மேலும் அவர் அந்த மீனை  சுமார் 25 கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்துள்ளார். இந்த மீனையும் ஒருவேளை அவர்கள் ஜப்பானில் விற்பனை செய்திருந்தால் 10 முதல் 15 மடங்கு கூடுதல் லாபம் கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |