Categories
உலக செய்திகள்

மர்மமான இறப்பு…. வீட்டில் கிடந்த சடலங்கள்…. அதிரடி விசாரணையில் போலீஸ்….!!

கிராமப்புறத்தில் உள்ள ஒரு வீட்டில் இறந்த நிலையில் இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரித்தானியா நாட்டில் Polperro என்ற ஒரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள வீட்டில் ஒரு பெண் மற்றும் ஆண் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இரு சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில் “இறந்த இருவரும் கணவன் மனைவியாக இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இறந்து கிடந்த பெண் மற்றும் ஆணின் வயது 40 மற்றும் 50 இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து இறந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என போலீசார் கூறியுள்ளனர்.

Categories

Tech |